
மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, அங்குப் பணியாற்றுபவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும்.
காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
தண்டாயுதபாணி கோவில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கை தொடர்பாகத் தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
