அம்பேத்கரின் நினைவுநாள் நாடுமுழுவதும் கடைப்பிடிப்பு.!

அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவரின் உருவப்படத்துக்குக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவுநாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டித் தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவரது சிலை முன் வைக்கப்பட்டுள்ள படத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான இராதாகிருஷ்ணன் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *