Advertisements

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வடக்கு வெள்ளூர் அருந்ததியர் மக்களுக்குத் தமிழக அரசு கொடுத்த நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக் கோரி விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த வடக்கு வெள்ளூரில் அருந்ததி இன மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டுப் பல ஆண்டுகளாக மனு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் இலவச மனைப் பட்டா வழங்கியதாகத் தமிழக அரசு அறிவித்தது. அந்த இடத்தை இதுவரையிலும் அளவிட்டு ஒதுக்காமலும், மக்களுக்குப் பட்டா வழங்காமலும் அரசு அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினர் தமிழக அரசு கொடுத்துள்ள நிலத்தில் கொட்டகை அமைத்து அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுக் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், வடக்கு வெள்ளூர் மக்களும் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், வடக்கு வெள்ளூர் மக்களும் ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisements


