Indian 2: டீசர் வெளியீடு!

இந்தியனுக்கு சாவே கிடையாது என்ற வசனத்துடன் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், விவேக் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிக்கும் இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான வீடியோவில் தமிழ் மொழியில் ரஜினி வெளியிட்டார். இந்தியன்2  அறிமுக வீடியோவில் , ”எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பாக நான் வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது” என்ற வசனத்துடன் அறிமுகமாகிறார் இந்தியன் தாத்தா. அடுத்ததாக அரசு பணிக்கும், காண்டிராக் ஒப்பந்தத்திற்கும் அதிகாரிகள் லட்சங்களில் லஞ்சம் கேட்கும் காட்சிகளும் #Comebackindian என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

கொரோனா பரவலின் போது பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் இரவில் விளக்கு ஏற்ற சொன்னது போல் படத்தில் தெருவில் நின்று கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டு நிற்கும் காட்சிகளும், கையில் கரண்டியை எடுத்து பிளேட்டை தட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இறுதியாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தோற்றத்தில் வரும் கமல்ஹாசன், ’வணக்கம் இந்தியா…இந்தியன் இஸ் கம்பேக்’ என கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

https://www.youtube.com/watch?v=kqGj31bQQQ0&list=PL_DaWb6RFQc21QY7EeP8IDYe26ZWsOsPs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *