Yogi Babu: திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம்!

ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகிபாபு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்…

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் மூலவர், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, பெருமாள், ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் யோகி பாபுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் யோகி பாபு கோவில் தூய்மை பணியாளரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *