கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என டிரம்ப் பேச்சு.!

Advertisements

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் தெரிவித்தாா்.

அதை இந்தியா மறுத்துள்ள நிலையில், ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் எனவும் சீனா பகுதியளவு குறைத்துக்கொள்ளும் எனவும் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேசிய அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த மோதலைத் தான் நிறுத்தியதாகக் கூறினார்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி இடையே அதிக வெறுப்புணா்வு உள்ளதால் அங்குப் போா்நிறுத்தம் மேற்கொள்வது கடினமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, தென்கொரியாவில் நடைபெறும் ஆசியா – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப் பங்கேற்றுச் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்துகிறாா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *