திமுக இளைஞரணி கடுமையாக உழைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்.! 

தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையாக உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியபோது, பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது என்றும் தமிழ்நாட்டை பார்த்தாலே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எரிச்சல் வருகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம் எனவும் கடுமையாக உழைத்தால் தான் மட்டுமே இடம் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *