
கிரிக்கெட் வானில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்..வால் நட்சத்திரமாய் ஷமி. அக்னி நட்சத்திரமாய் யாதவ்!
ஒன்றா இரண்டா 20 வருடங்களுக்குப் பின் சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த இந்தியா. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. 2023 ஆசிய உலகக் கோப்பை போட்டியில் இதுவரை தோல்வியே கண்டிராத இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் நீயா நானா ஒரு கை பார்த்து விடலாம் என்று களமிறங்கின ஹிமாசல பிரதேச தரம்சாலா மைதானத்தில் இரு தரப்பும் சிறப்பாக ஆடிய. எதிராளி என்பதால் குறைத்து மதிப்பிடக் கூடாது. குறை சொல்லவும் கூடாது.
டாஸ் வென்ற இந்தியா நியூசிலாந்தை பேட்டிங்குக்கு அழைக்க களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பத்திலேயே 0 ரன்னில் வில் யங்கை 17 ரன்னில் போல்டாகி வெளியேற்றினார் முகமது ஷமி. ஷமிக்கு இது தான் முதல் அறிமுக உலகக் கோப்பை. ஆரம்பமே அசத்தல் தான். முதல் பந்து போட்டார் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் நிதானமான ஆடி ரன்களை குவித்தனர். ரன் ரேட்டும் 5 க்கு மேல் ஓடியது மிட்செல் 130 ரன்களை எடுத்தார். ரன்ரேட் கூடிக் கொண்டே போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக அருமையான 3 கேட்ச்களை நழுவ விட்டு இந்திய ரசிகர்களை உச் கொட்ட வைத்தார்கள். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கிரிக்கெட் வானில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்..வால் நட்சத்திரமாய் ஷமி. அக்னி நட்சத்திரமாய் யாதவ்!

ஒன்றா இரண்டா 20 வருடங்களுக்குப் பின் சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த இந்தியா. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. 2023 ஆசிய உலகக் கோப்பை போட்டியில் இதுவரை தோல்வியே கண்டிராத இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் நீயா நானா ஒரு கை பார்த்து விடலாம் என்று களமிறங்கின ஹிமாசல பிரதேச தரம்சாலா மைதானத்தில் இரு தரப்பும் சிறப்பாகவே ஆடின. எதிராளி என்பதால் குறைத்து மதிப்பிடக் கூடாது. குறை சொல்லவும் கூடாது.
டாஸ் வென்ற இந்தியா நியூசிலாந்தை பேட்டிங்குக்கு அழைக்க களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பத்திலேயே வில் யங்கை 17 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் முகமது ஷமி. ஷமிக்கு இது தான் முதல் அறிமுக உலகக் கோப்பை. ஆரம்பமே அசத்தல் தான். முதல் பந்து போட்டார் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் நிதானமான ஆடி ரன்களை குவித்தனர். ரன் ரேட்டும் 5க்கு மேல் ஓடியது மிட்செல் 130 ரன்களை எடுத்தார். ரன்ரேட் கூடிக் கொண்டே போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக அருமையான 3 கேட்ச்களை நழுவ விட்டு இந்திய ரசிகர்களை உச் கொட்ட வைத்தார்கள். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ரச்சின் மற்றும் மிட்செல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்து வந்தனர்.
அடுத்தடுத்து அரைசதம் அடித்த இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். இந்தியா விக்கெட்டை தேடும்போது மீண்டும் பந்துவீச வந்த முகமது ஷமி, 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 75 ரன்களில் இருந்த ரச்சினை வெளியேற்றி அசத்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். 1975 உலகக் கோப்பையில் சதமடித்த க்ளென் டர்னருக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை சேர்த்தார் மிட்செல்.

பார்த்தார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் இனி வேலைக்கு ஆகாது என விக்கெட் போடுவதில் சுழட்டுடா பந்தை என்ற வேகத்தில் ஷமி சுழட்டினார் பந்தை. சூறாவளி மிட்செல்லை 130 ரன்களில் வெளியேற்றிய ஷமி, நியூசிலாந்தை 300 ரன்கள் எட்டாமல் மடை போட்டார்.
தொடர்ந்து களத்திற்கு வந்த ஷான்ட்னர் மற்றும் ஹென்றி இருவரையும் போல்டாக்கி வெளியேற்றிய ஷமி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி நட்சத்திரமாய் ஜொலித்தார். . இதன்மூலம் உலகக்கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பவுலராக உயர்ந்தார். குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த இன்னிங்ஸ் வெறும் 273 ரன்களுக்கே முடிந்தது. காரணம் ஷமி வீழ்த்திய விக்கெட்டுகள். இப்படி தன்னுடைய ஒவ்வொரு ஸ்பெல்லிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் ஷமி. அதன் காரணமாக கோலியைப் பின்னுக்குத்தள்ளி ஆட்ட நாயகன் விருது வென்றுவிட்டார்.50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 273 ரன்கள் சேர்த்தது.
274 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ரோகித் சர்மா, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 46 ரன்னில் வெளியேறினார். உடன் சுப்மன் கில்லும் 26 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா தடுமாறிய நிலையில் கோலி மற்றும் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடினர்.
இருவரும் விட்டேனா பார் என்பது போல ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் . ஸ்ரேயாஸ் 33 ரன்களில் வெளீயேறினார். அடுத்து வந்த கேஎல் ராகுல் மற்றும் கோலி இருவரும் விக்கெட்டை இழக்காமல் பவுண்டரிகளை விரட்ட ஆரம்பித்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட இலக்கை நெருங்கியது இந்திய அணி. ஆனால் ராகுலை மிரட்டி அனுப்பினார் மிட்செல்
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரனவுட் ஆனார். கோலி கை கொடுக்காததால் பரிதாமாக ரன் அவுட்டில் பெவிலியன் திரும்பினார். முதல் உலக கோப்பை போட்டியிலேயே மோசமான முறையில் வெளியேறினார்.
நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்திய அணிக்கு திடீரென சிறிது சரிவு ஏற்பட்டது. 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய ரசிகர்களை ஐயோ சொல்ல வைத்தது. விடுவாரா விராட் கோலி விரட்டினார் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை. அவ்வளவு தான் இந்த ஜோடி கூட நல்ல ஆட்டம் ஆடி இந்தீய ரசிகர்களை நிம்மதி பெரு மூச்சு விட வைத்தது. 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்டி சதத்தை நோக்கி சென்ற விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை எட்ட முடியாமல் 95 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் ஜடேஜா அழகாக வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார்.
ஒருநாள் உலகக் கோப்பையை பொறுத்தவரையில் இவ்விரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5 முறை வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி 5-3 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2003 உலகக்கோப்பை போட்டியில் மட்டும் தான் கடைசியாக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2007,2011,2015,2019 ஆகிய 4 உலகக் கோப்பைகளிலும் நியூசிலாந்து அணி தான் இதுவரை வென்றுள்ளது. கடந்த 20 வருடங்களாக தண்ணீர் காட்டிய நியூசிலாந்து தரை தட்ட வைத்தது இந்தீயா 2023-ல் . நாங்க தான் ஜோரு. இனி எல்லாமே பாரு.


