Cricket World Cup: இந்திய அணி 5 ஆவது தொடர் வெற்றி!

இந்திய அணி 5 ஆவது தொடர் வெற்றி!

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தற்போது வரையில் 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய  அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2 ஆவது இடத்தில் உள்ளது.

50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் சேர்த்தது.கடைசியாக நியூசிலாந்து இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 10விக்கெட்டுகளை இழந்து 50 ஒவரில் 273  ரன்களை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய  இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசியாக இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *