Advertisements

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடந்தது.
இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியின்போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது.
இதுகுறித்து விரிவான விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2-வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்விளக்குகள் எரியாததால் 35 நிமிடங்களுக்குப் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisements
