
இந்தூரில் இமாலய வெற்றி.
இடியுடன் கூடிய மழைபோல
இந்தியா ரன் மழை பொழிந்தது…
இந்தியா வந்துள்ள ஆஸ்திரெலிய அணி 3 போட்டிகள் கொண்அ ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாட வருகிறது. னுதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் ஆஸி.க்கு எதிரான 2- ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்திருந்தது. மலைபோல ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்திருந்தது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாகச் சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களத்தில் இறங்கினர். ருதுராஜ் 8 ரன்னில் வெளியேற, அடுத்ததாகக் கில்லுடன் இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
கில் 97 பந்துகளில் 104 ரன்னும், ஷ்ரேயாஸ் 90 பந்துகளில் 105 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கே.எல். ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர் போட்டியைப் போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 72 ரன்கள் குவித்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 399 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
பின்பு ஆட்டம் தொடங்கியதும் டக்வொர்த்-லீவிஸ்’ விதி முறைப்படி 33 ஓவரில் 317 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது.அஷ்வின் சுழலில் சிக்கி லபுசேன் போல்டானார். பிறகு ஆடிய வார்னர் அவுட்டானார். அபாட் அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தாலும் அடுத்து வந்த டெயிலெண்டர்கள் ஜடேஜா வலையில் சரிந்தனர்.ஆஸ்திரேலீய அணி28,2 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் 200 யெடுத்து சுப்மந்கில்-ஸ்ரேயாச் சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பாக இதே இந்தூரில் சச்சின் – லட்சுமன் ஜோடி 199 ரன்கள் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


