Thevar Jayanthi: மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

Advertisements

முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை ஒட்டி மதுரையில் உள்ள தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 16வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் பசும்பொன்னில் நடக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். முன்னதாக மதுரை சென்ற முதல்வர் கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அதை தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், பி.மூர்த்தி,பெரியகருப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டிரோன் கேமராக்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *