அமெரிக்காவிற்கு முதல் நாளே கனடா வைத்த செக்.. டிரம்பிற்கு வந்த சோதனை!

Advertisements

ஓட்டவா:

அமெரிக்கா கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்… கண்டிப்பாக அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது. அப்படி இருக்க அமெரிக்கா எங்கள்மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது.

அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது. மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.

சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள்மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்கமாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது.

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ… கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ… அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

கனடா ஏன் அமெரிக்காவிற்கு மிக முக்கியம்:

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பி உள்ளது.

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியில் குறிப்பிடத் தக்க அளவு ஆகும்.

2022 ஆம் ஆண்டில், கனடா சுமார் 53 டெராவாட் (TWh) மின்சாரத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. கணக்குப்படி பார்த்தால் மின்சாரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு என்று அனைத்திற்கும் கனடாவையே அமெரிக்கா நம்பி உள்ளது.

கனடா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை:

இப்படிப்பட்ட நிலையில்தான் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ… கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ… அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளைத் தனது நாட்டுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளைக் களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்தப் பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும்.

பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்தப் பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காகப் படைகளைக் கூட அனுப்புவேன்.

தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்குப் பொருளாதார அழுத்தம் தருவேன்.

மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களைக் கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும், என்றுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்துக் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *