10th Class Student Gang Rape: அத்துமீறிய அக்காள் கணவர்.. கர்ப்பமாக்கிய அண்ணன்கள்!

Advertisements

வீட்டில் தனியாக இருந்தபோது  8-ம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய அண்ணன்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

ராயபுரம்: புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

சிறுமிக்குக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் அவரைப் பரிசோதித்தபோது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியைச் சீரழித்து இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்து மாணவியிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தாயின் அக்கா மகனான மனோஜ், சிறுமியின் தந்தையின் அண்ணன் மகன்களான அஜய், கண்ணா பாண்டா ஆகிய 3 பேர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதில் மனோஜை போலீசார் கைது செய்தனர். அவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது.அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோல விருகம்பாக்கம் குமரன் காலனியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவரது அக்காள் கணவர் அத்துமீறியது தெரிந்தது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *