
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் திறமையுள்ள நடிகர் அஜித்குமார். இவருக்கு சிறு வயதிலிருந்தே பைக், கார் ரேஸ் என்றால் அவ்வளவு பிரியம் கனவும் கூட. அதனால்தான் பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்பிலேயே கைவிட்ட அஜித்துக்கு, ஆட்டோமொபைல் கற்று சொந்தமாக ஒர்க் ஷாப் அமைக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது.துபாயில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற `24 ஹெச் சீரிஸ்’ என்ற 24 மணி நேர தொடர் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ களமிறங்கியது.
பங்கேற்ற முதல் போட்டியிலேயே 3ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது அஜித்குமார் ரேஸிங் அணி. ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ என்ற விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டார் அஜித். அதற்கடுத்து இத்தாலியில் நடைபெற்ற 12 ஹெச் முகெல்லோ சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாம் பிடித்தது. இ
ந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக பெல்ஜியத்தில் நடைபெற்ற ஸ்பா – ஃபிரான்கோர்சாம்ஸ் (Circuit of Spa-Francorchamps) கார் ரேஸில் அஜித்குமார் ரேஸிங் அணி இரண்டாம் இடம் பிடித்து தொடர்ந்து மூன்று வெற்றிக் கோப்பைகளை ஹாட்ரிக்காக பெற்றிருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே உலக அளவில் பெருமையை தேடித்தந்திருக்கிறார் அஜித்! தற்போது பத்ம பூஷண் விருதையும் தட்டிச்சென்றிருக்கிறார்.
எத்தனையோ தோல்விகள், தடைகள், விமர்சனங்கள், இடைவெளிகளை கடந்து, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸில் களமிறங்கிய அஜித், தனது 54ஆவது வயதில் பெரும் துள்ளலுடன் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். `எல்லோரும், எல்லாமும் கைவிடும் போது நீ உன்னை நம்பு’ என்று விடாமுயற்சி படத்தில் அஜித் பேசியது வெறும் சினிமா வசனமல்ல… அவரது வாழ்க்கை அனுபவம்!


