
சென்னை:
தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் அலைகடலெனத் திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! எனக் கூறியுள்ளார்.
