கடலூரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!

கடலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொடுக்கன்பாளையத்தில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிப்பாகங்கள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சிதம்பரத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான்சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டிப் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சோழதரத்தில் இருந்து இராஜமதகு வரை படகுச்சவாரி அறிமுகப்படுத்திச் சுற்றுலாவை மேம்படுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *