
நாகப்பாவை தூக்கிய வீரப்பனுக்கு நயன்தாராவை கடத்துவதற்கு எவ்வளவு நேரமாகும் எனச் சர்ச்சையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும், ”வீரப்பன் சந்தன மரத்தை வெட்டி வித்தாரு. சரி நான் ஒத்துக்குறேன். யானைகளைக் கொன்னு தந்தத்தை வித்தாரு. சரி அதையும் நான் ஒத்துக்குறேன். வித்தவரு காட்டுக்குள்ள இருந்தாரு. வாங்குனுவங்க எங்க இருந்தாங்கனு நானும் பல வருஷமா கேக்குறேன். யாரும் பதில் சொல்ல மாட்றான். சரி, வித்து என்ன பண்ணாரு. காட்டுக்குள்ள பெரிய பெரிய பங்களாவ கட்டுனாரா? நாட்டுக்குள்ள எத்தன பேரு சாராயம் வித்துட்டு இருக்கான்.

முன்னதாக மாதனூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பதவி ஏற்காமல் இருக்கும் பட்டியலின பெண்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், சமூக நீதி, சனாதன ஒழிப்பு, பெரியார் மண் எனப் பேசும் திமுக அரசில் தேர்தலில் வெற்றிப்பெற்ற பட்டியலின பெண்ணிற்கு தற்போது வரை பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றார்.


