Mayor Priya:தண்ணீர் மீண்டும் ரிவர்ஸ் ஆகல ..மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துருக்கு !

Advertisements

வேளச்சேரியில் மட்டுமே முன்னெச்சரிக்கையாக படகுகள், மற்ற இடங்களில் தற்போது வரை தேவைப்படவில்லை என்று .மேயர் பிரியா கூறினார்.

சென்னை மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-மழைநீர் வடிகால் பணி முடிந்த இடங்கள் மாநகராட்சிக்கு கைகொடுத்துள்ளன. வேளச்சேரியில் மட்டுமே முன்னெச்சரிக்கையாக படகுகள், மற்ற இடங்களில் தற்போது வரை தேவைப்படவில்லை. கால்வாயில் இருந்து தண்ணீர் மீண்டும் ரிவர்ஸ் ஆகாமல் இருப்பதை கண்காணித்து வருகிறோம். தொடர் மழையால்தான் சென்னையில் சில இடங்களில் மழைநீர் வடியவில்லை. முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் மோட்டார்கள் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *