
சூதாட்டச் செயலிகளுக்கு விளம்பரங்களில் நடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைணா, நடிகை மஞ்சு இலட்சுமி ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
செல்போன்களிலும் கணினியிலும் இணையவழியில் நடைபெறும் சூதாட்டத்தில் பங்கேற்று விளையாடும் பல்வேறு செயலிகள் வந்துள்ளன. அவற்றுக்கான விளம்பரங்களில் திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஒண்பெட் சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடித்த சுரேஷ் ரைணா இன்று தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.இதேபோலச் சூதாட்டச் செயலிகளின் விளம்பரத்தில் நடித்த நடிகை மஞ்சு இலட்சுமி ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

