தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள்!

Advertisements

வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் இருந்தாலும் தினசரி இதனைச் சாப்பிட்டால் சேர்த்து கொள்வது எதிர்பாராத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகளாவிய உணவுமுறைகளிலும், பல்வேறு கலாச்சாரங்களிலும் உருளைக்கிழங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. கிடைக்கும் தன்மை, மலிவு விலை, சுவை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உருளைக்கிழங்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிழங்கு வகைகளில் ஒன்றாக உள்ளது.

வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் இருந்தாலும் தினசரி இதனைச் சாப்பிட்டால் சேர்த்து கொள்வது எதிர்பாராத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உருளை கிழங்குகளில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இந்த மாவுச்சத்துள்ள வேர் காய்கறியை அதிகம் அல்லது தினமும் சாப்பிடுவதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நீங்கள் உருளைக்கிழங்கு இல்லாமல் ஒருநாள் கூடச் சாப்பிட மாட்டீர்கள் என்றால், தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

எடை அதிகரிக்கும்:

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கலோரிகள் அதிகம். வறுத்த மற்றும் வெண்ணெய் தடவிய உருளைக்கிழங்கு டிஷ்களை தொடர்ந்து டயட்டில் சேர்த்து கொள்வது உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு:

மாவுச்சத்துள்ள இந்த வேர் காய்கறி ஹை-கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது, எனவே இதனைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும்.

மேலும் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதை சிக்கலாக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை மிதமான அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செரிமான பிரச்சனைகள்:

உருளைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவது வயிற்று உப்புசம், வயிற்று மற்றும் வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான அசௌகரியங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

பச்சையான உருளைக்கிழங்கில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் இருக்கிறது. இது அது பெருங்குடலில் நொதித்து, இரைப்பை குடல் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து சமநிலையின்மை:

உருளைக்கிழங்குகளில் சில அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் இருந்தாலும், இவற்றில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

எனவே உங்கள் டயட்டில் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கப்படாத நிலையில், தினமும் உருளைக்கிழங்கை மட்டும் தவறாமல் உட்கொள்வது ஊட்டச்சத்து சமநிலையற்ற டயட்டை நீங்கள் பின்பற்ற வழிவகுக்கும்.

எனவே உங்கள் டயட்டில் பிரதான உணவாக உருளைகிழங்கை நம்பாமல் இருக்க வேண்டும்.

நச்சுத்தன்மை:

சேதமடைந்த அல்லது சரியற்ற முறையில் சேமித்து வைக்கப்படும் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வது, சோலனைன் மற்றும் அக்ரிலாமைடு போன்ற நச்சு சேர்மங்களின் நுகர்விற்கு வழிவகுக்கும்.

அதே போல அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கை சமைப்பது அக்ரிலாமைடு உருவாக வழிவகுக்கும். மேற்கண்டவை தலைவலி, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *