Hazrat Aisha: அவர்களுக்கு எந்தவிதமான தண்டனைகளோ சோதனைகளோ கிடைப்பதை நான் விரும்பவில்லை!

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்…

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதரே உஹது போரில் தங்களுக்கு நடந்த நிகழ்ச்சியைவிட கொடூரமான நிகழ்வு நடந்தது உண்டா என்று கேட்டார் அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் இதைவிட கடுமையானதும் கொடூரமானதும் அகபாவில் நடந்தது நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன் அங்கே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேக கூட்டம் நிழலிட்டவர்களாக நிற்பதை பார்த்தேன். என்னை அழைத்து உங்களுடைய சமுதாயம் சொன்னதையும் உங்களை மறுத்துப் பேசியதையும் அல்லாஹ் கேட்டு விட்டான்.

ஆகவே இரண்டு மலைகளுக்கு அதிபதியான வானவர்களை அல்லாஹ் அனுப்பியுள்ளான் ஏனென்றால் அம்மக்கள் குறித்து நீங்கள் விரும்பும் கட்டளையைச் செய்து முடிக்க வேண்டுமென்று மலைகளுக்கு அதிபதியான வானவர் கூறினார் எனக்குச் சலாம் சொல்லி நீங்கள் என்ன கட்டளை யிடுகின்றீர்கள் என்று கேட்டார்கள் இந்த மக்களை இரண்டு மலைகளுக்கு இடையே வைத்து நசுக்கி விட விரும்புகிறீர்களா என்று வினவினர் அதற்கு நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அம்மக்களை விட்டு விட வேண்டும் எனக் கூறிவிட்டார்கள் அவர்களுக்கு எந்தவிதமான தண்டனைகளோ சோதனைகளோ கிடைப்பதை நான் விரும்பவில்லை என்று குண நபி நாதர் தெரிவித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *