Rabiah ibn Kab: நீ விரும்பியதை என்னிடம் கேள்!

ரபீஆ பின் கஅப் அஸ்லமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்…

நான் ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரவு தங்கியிருந்தேன் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைக்கால்களை (வுழு) கழுகுவதற்காகத் தண்ணீரையும் தேவையான பிற பொருள்களையும் கொண்டுவந்து வைத்தேன் அதனால் மகிழ்ச்சி அடைந்த நபியவர்கள் நீ விரும்பியதை என்னிடம் கேள் என்று சொன்னார்கள்.

அதற்கு நான் இறைத்தூதர் அவர்களைத் தங்களுடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது என்று கூறினேன் அப்போது அண்ணலார் அவர்கள் வேறொன்றும் தேவையில்லையா என்று கேட்டார்கள் இல்லை அதுதான் என் கோரிக்கை சொர்க்கத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன் அதற்கு அவர்கள் அதிகமாகத் தொழுது உமது கோரிக்கை நிறைவேற எனக்குத் துணை புரியுங்கள் என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *