
திருப்பதி:
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரன் விஷ்ணுவின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம், கோத்தப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். அவர் பேசியது,
நான் தற்போது அரசியலில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை என்றார்.
தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.
முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர் தற்போது தான் அரசியலை இல்லையெனப் பேசியது பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.
