
10 ஆண்டுகளாகக் கள்ள சந்தையில் மது விற்பனையைப் படுஜோராக நடத்தி வந்த பெண் குற்றவாளி மனதை மாற்றி, அனைவரும் பசி ஆறும் வகையில் சாப்பாட்டு கடை வைத்துக் கொடுத்த போலீசாரின் மனிதநேயம் செயல் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது…
சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாலம்மாள். இவர் கடந்த 10 வருடங்களாக அந்தப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் இருக்கிறதோ இல்லையோ பாலம்மாளிடம் 24 மணி நேரமும் மது பிரியர்கள் மது வாங்கி செல்வது வாடிக்கை.
இந்த நிலையில் தான், இவரது நடவடிக்கையைத் தீவிமாகக் கண்காணித்து வந்த காவல்துறையினர் கூற்றி வளைத்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினியில் வெளியில் வந்து பளைய கருடி கதவைத் திரடி என்பது போல் மீண்டு தனது தொழிலைப் படுஜோராகச் செய்து வந்தார். மேலும் மேலும் இதே வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாக ஒன்றாகி போனது.
ஒரு கட்டத்தில் போலீசாரே, அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தனக்கு மது விற்பதை விட வேறு எந்தத் தொழிலும் தெரியாது நான் என்ன தான் செய்வது எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு மனம் இறங்கிய காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ண ராஜ், தனது சொந்த செலவில் தள்ளுவண்டி மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் உபயோக பொருட்களை வழங்கிக் கொடுத்துள்ளார்.
இதனைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண், இனிமேல் இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட மாடேன் என்று சத்தியம் செய்துள்ளார். போலீசார் மனித நேயத்துடன் செய்த செயல், பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.


