K. Annamalai: இ.ந்.தி.யா கூட்டணி மண்ணை கவ்வும்!

Advertisements

தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது என்றும். உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பப்புவாக உள்ளார் தொடர்ந்து அவர் இதுபோலப் பேசினால் இ.ந்.தி.யாக்கூட்டணி மண்ணை கவ்வும்’ என அண்ணாமலை தெரிவித்துள்ளார்…

தூத்துக்குடி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைஇரண்டாம் கட்ட பாதயாத்திரை இன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியிலிருந்து துவங்குகிறார். பின்னர் பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார்.இதற்காகச் சென்னையிலிருந்து விமானம்மூலம் தூத்துக்குடி வந்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு நேரடியாகத் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகியே காரணம் நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

பல்லடம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரோடு அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் இருந்த நபர் அவர்களைக் கொலை செய்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தை குடிகார நாடாக மாற்றியதன் காரணமாக இந்தப் படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தென் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது.தமிழகத்தின் பிரச்சினைகள்குறித்து பேசாமல் இந்தியா கூட்டணிகுறித்து பேச முதலமைச்சர் புறப்பட்டுள்ளார்.

அவருக்குத் தமிழகத்தின் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் இந்தியா குறித்து அவர் பேச வேண்டாம் கும்மிடிப்பூண்டியை தாண்டித் திராவிட முன்னேற்றக் கழகம் எதுவும் செய்ய முடியாது.

தென்னிந்தியாவின் பப்புவாக உதயநிதி உள்ளார். மோடி சமூகம்குறித்து ராகுல் காந்தி பேசியது போல் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பேசினால் இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரியும் தற்போது ஐந்து சதவீதம் வரை இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

தொடர்ந்து இதுபோல உதயநிதி பேசி வந்தால் இந்தியா கூட்டணியின் வாக்குகள் 20% வரை குறையும்.ஒரு கருத்தைப் பேசிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து வருகிறார். உதயநிதி பேசுயதை காங்கிரஸ் கட்சியினரே எதிர்க்கிறார்கள்.

வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மண்ணை கவ்வ போவது உறுதி. இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கூடத் தேசிய ஜனநாயக கூட்டணி 317 இடங்களில் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மோடி இன்னும் பிரச்சாரத்திற்கு வரவில்லை அவர் பிரச்சாரத்திற்கு வந்தால் 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

ஆறு முறை ஆட்சியில் இருந்த பிறகும் சமூக நீதி குறித்து பேசி வருகிறார்கள். இவர்களால் சமூக நீதியை கொண்டு வர முடியவில்லையா எனக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை.

திராவிட முன்னேற்றக் கழகம்குறித்து வட இந்தியாவில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கூடப் பேசப்படுகிறது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியைக் காட்டவில்லையா என்ற கேள்விக்குத் தமிழகத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது அவர்கள் நடவடிக்கைகளால் தமிழகத்தின் மாண்பு குறைந்து விடும்.

ஒரே ஒரு வழக்கிற்கு பிறகு சீமான் திமுகவின் பி டீமாக மாறிவிட்டார் திமுகவை பங்காளியெனக் கூறுகிறார். தற்போது சீமான் 2.0 ஆக இருக்கிறார். தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான் ஒரே வழக்கிற்கு பயந்து திமுகவை பங்காளியெனக் கூறுவது வருத்தமாக உள்ளது.

தென் தமிழகத்தில் வளர்ச்சி இல்லாததே தொடர் கொலைகள் மற்றும் அடிதடி சம்பவங்களுக்குக் காரணமாக அமைகிறது. ஜாதிய வன்முறைகளும் ஏற்படுகிறது.திமுக அரசுக்குத் தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை.புதிய பார்வை கொண்ட கட்சியாகப் பாரதிய ஜனதா கட்சி வழங்குகிறது. பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே தென் தமிழகத்தில் வளர்ச்சியைக் கொண்டுவர முடியும்.

சமீபத்தில் கையெழுத்து இடப்பட்ட யுபிஐ அக்ரிமெண்ட் வேலைவாய்ப்பில் தென் தமிழகத்திற்கு 75 சதவீதம் வழங்க வேண்டுமென அதன் உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.
இந்தியாவில் வளர்ச்சி குறைந்த பகுதிகளாகத் தென் தமிழகம் உள்ளது.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 2004 ஆம் ஆண்டு போன்ற சூழல் தான் ஏற்படும் அவர்கள் வைத்திருக்கும் எம்பிக்களுக்கு ஏற்ப மந்திரி சபையைக் கூறு போடும் நிலை ஏற்படும் யார் பிரதமர் என்று அறிவிக்காமல் கடைசி நேரத்தில் மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார்கள்.

அந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது போன்ற நிலை இந்தியாவிற்கு ஏற்பட வேண்டாம். நிலையான ஆட்சி அமைப வேண்டும்எனஅண்ணாமலை தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *