Advertisements

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழியாக வெளியாகின்றன.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்களில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்பித்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில் மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
Advertisements




