“விஜய்யை அழைக்க எனக்குத் தடையில்லை, ஆனால்…” – ஆளுநர் போட்ட நிபந்தனை…..!

பெரும்பான்மை இல்லாததால் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்றும், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வந்தால் அவரை அழைக்கத் தயார் என்றும் தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.
ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைக்கவில்லை. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் அளித்த பேட்டியில், பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்சினை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பிரச்சினை. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.
விஜய் பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார். விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன்.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது. தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *