TVK Conference:திமுகவுக்கு போட்டியா? விஜய் கட் அவுட்டால் அதிர்த்துப்போன அரசியல் விமர்சகர்கள்!

Advertisements

தவெக மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மாநாட்டு திடலில் வைக்கப்பட்டு இருந்த பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் இடம் பெற்றுள்ளதை பார்த்து, அரசியல் விமர்சகர்களை ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏனெனில், திமுக எப்போதுமே பெரியாரின் கொள்கையைக் கடைபிடித்து வருவதை அடுத்து, திமுகவுக்கு போட்டியாகத் தான் களமிறங்க உள்ளதை மறைமுகமாகக் கூறுவதற்காக விஜய், பெரியாரின் கட்-அவுட்டுக்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவில் இருப்பதை காட்டுவதற்காகக் காமராஜர் கட்-அவுட்டை வைத்திருப்பதாகவும், பட்டியல் இன மக்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதற்காக அம்பேத்கரின் கட்-அவுட்டை வைத்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த கட்-அவுட்டுக்கள் பெரும் பேசுப்பொருளாக உருமாறியுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை முழுமையாக அறிவிப்பார் என்றும் சுமார் 2 மணி நேரம் அவர் பேச இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *