நீதிபதி யஸ்வந்த் வர்மா விவகாரம் – தில்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு! 

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் இருந்த விவகாரத்தையடுத்து, அவரிடம் இருந்த நீதித்துறைக் கடமைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
யஸ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அங்குத் தீயைக் கட்டுப்படுத்தச் சென்ற வீரர்கள் கட்டுக்கட்டாகப் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
இந்தத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தங்கள் வீட்டில் பணம் இருந்ததாகக் கூறப்படுவதை யஸ்வந்த் வர்மா மறுத்தார். அதேநேரத்தில் இது குறித்து விசாரிக்க மூத்த நீதிபதிகள் மூவர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார்.
இந்நிலையில் யஸ்வந்த் வர்மாவிடம் இருந்த நீதித்துறைக் கடமைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை இது தொடரும் என்றும் தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *