
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற ஒரு நகைச்சுவை தான் “சமூக நீதி விடுதி” என்று பெயர் மாற்றியுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாக அரசு விடுதிகளைத் தரம் உயர்த்தாத திமுக அரசு, தேர்தல் நெருங்கும் வேளையில் தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பெயர் மாற்று அரசியலைச் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி என்பது பெயரில் இருப்பதை விடச் செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு, சீர்மரபினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளைச் சமூக நீதி விடுதிகள் என்ற பெயரில் இணைக்கும் திமுக அரசின் திட்டம் அபத்தமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

