Advertisements

இன்னும் இரண்டு வருடங்களில் நாவல் எழுதி வெளியிடுவேன் : நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி
நமது கையில் தான் செல்போன் இருக்க வேண்டும் செல்போன் கையில் நாம் இருக்கக் கூடாது : மாணவர்களுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிவுரை நாவல் எழுதுவதுதான் தனது நீண்ட நாள் ஆசை எனவும் இன்னும் இரண்டு வருடங்களில் நாவல் எழுதி வெளியிடுவேன் எனவும் நடிகரும் இசை அமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவித்தார்.
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பில் தேசிய அளவிலான ஐந்தாவது ஸ்கெட்ச் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று கட்டடக்கலை துறை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். 28 வகையான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
விழா மேடையில் பாட்டுப்பாடி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, அறிவுரையையும் வழங்கி அவர்களை வழிநடத்தினார். இன்னும் இரண்டு வருடங்களில் தான் நாவல் ஒன்றை எழுதி வெளியிடப் போவதாகவும் அது தனது நீண்ட நாள் ஆசை எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் செல்போனை தான் எங்கும் கொண்டு செல்வதில்லை எனவும், நமது கையில் தான் செல்போன் இருக்க வேண்டும் செல்போன் கையில் நாம் இருக்கக் கூடாது எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இல்லையென்றால் செல்போனின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்று விடுவோம் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
Advertisements


