Hike In Electricity Prices: மனித சங்கிலி போராட்டம்!

Advertisements

தொழில் நிறுவனங்களின் மீதான மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யகோரி தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்புகளில் இருக்கக்கூடிய 400-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள்  1000 மேற்பட்டோர் ஒன்று இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நீண்ட வரிசையில் நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பாகத் தொழில் நிறுவனங்கள்மீதான மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்புகளில் இருக்கக்கூடிய 400-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் என 1000 நபர்கள் ஒன்று இணைந்து கைகளைக் கோர்த்தபடி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தொடங்கப்பட்டு சிப்காட் புளியந்தாங்கல் போன்ற பகுதிகளில் வரிசையாக நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தின்போதுபீக் ஹவர் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் தொழில்துறை நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக அமைந்துள்ள 430% நிலை கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தொழில் கூடங்களில் அமைக்கும் சோளாறுக்கான 15% கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

வெல்டிங் மின் இணைப்புமீதான 15% கூடுதல் கட்டணத்தை நீக்க வேண்டும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் மீது இரண்டு ஆண்டுக்கு மின் கட்டணம் உயர்வு கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் எனத் தெரிவித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகக் கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள் முதலாளிகள் என அனைவரும் நீண்ட வரிசையாக நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *