Haryana Assembly elections:10 இடங்கள் கேட்கும் ஆம் ஆத்மி- 7 இடம்தான் என்கிறது காங்கிரஸ்!

Rahul Gandhi
Advertisements

அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து பாஜக-வை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியானது.

Advertisements

ராகுல் காந்தியின் கூட்டணி குறித்த கருத்தை ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சங் சிங் வரவேற்றிருந்தார். அத்துடன் மற்றொரு மாநிலங்களவை எம்.பி. ராகவ் சந்திரா காங்கிரஸ் சீனியர் தலைவர் கே.சி. வேணுகோபால் உடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் சந்திப்பு இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இரண்டு கட்ட பேச்சுவார்த்தையின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரியானாவில் 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற அடிப்படையில் 10 இடங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏழு தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 90 இடங்களில் 66 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு மத்திய தேர்தல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் தீப் பபாரியா “இரு கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில்தான் உள்ளது. இன்னும் ஏராளமான விசயங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது 90 இடங்களில் 49 இடங்கள் குறித்து இரண்டு நாட்கள் ஆராயப்பட்டன. மொத்தமாக 66 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, வியாழக்கிழமை இதற்கு தெளிவு கிடைக்கும் என்றார்.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் “கூட்டணி தொடர்பாக, இடங்கள் தொடர்பாக என எந்தவொரு முடிவு என்றாலும், அதை அரவிந்த் கெஜ்ரிவால்தான் எடுப்பார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *