ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதிப் பட்டியல் வெளியீடு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாகக் களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க, பா.ஜ.கத்தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சையென 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

மதியம் 3 மணியுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *