Hardik Pandya: தோல்வி மிகவும் நல்லதாம்!

Advertisements

Hardik Pandya

சில சமயங்களில் தோல்வி மிகவும் நல்லது, ஏனென்றால் அது உங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது’ எனக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார்…

புளோரிடா: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று இருந்தது.இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று நடந்தது. அதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் தோல்விகுறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசுகையில், சில நேரங்களில் தோல்வியடைவது அவசியம், ஏனெனில் அது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். கடினமான நிலையில் அணி போராடிய விதம் குறித்தும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் வீரர்கள் இந்த அனுபவத்தைத் தங்களை மேம்படுத்தப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

டி20 போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க எங்களுக்குப் போதுமான நேரம் உள்ளது. சில சமயங்களில் தோல்வி மிகவும் நல்லது, ஏனென்றால் அது உங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது’ எனக் கூறினார். மேலும் அவர், ‘அனைத்து இளம் வீரர்களுக்கும் சிறப்பான நன்றி. உண்மையைச் சொல்வதென்றால், அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்கள் இந்தத் தொடரைச் சவாலாக ஏற்றுக்கொண்டனர் மற்றும் தொடர் முழுவதும் அதனை வெளிப்படுத்தினர். வெற்றி மற்றும் தோல்வி செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று மேலும் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *