உயரே பறக்க உயிரை விட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்!

Advertisements

Remi Lucid | Hong Kong

சாகசம் செய்ய நினைத்து 68வது மாடியிலிருந்து கீழே விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் பலியானார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ரெமி லூசிடி. 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறிச் சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர். அதனைப் புகைப்படங்கள் எடுத்துச் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

Remi Lucid | Hong Kong | Instagram

கடந்த வாரம், இவர் ஹாங்காங்கிற்கு டிரெகன்டர் டவர் எனும் மிக உயரமான கட்டிடத்தில் ஏறிப் படம் எடுக்கச் சென்றார். இதற்காக லிப்டில் ஏறி 68வது மாடிக்குச் சென்று அங்குச் சில ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். போலீசார் நடத்திய சோதனையில் அவரின் கேமரா மற்றும் பாஸ்போர்ட்டு கிடைத்தது. இதனைக் கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *