Advertisements

ஈரானின் தாக்குதல்களால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்கா – ஈரான் அணு ஆயுதம் ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறினார்.
எனவே, இஸ்ரேல் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈரானின் தாக்குதல்களால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால், இனி இஸ்ரேல் பதிலடி கொடுக்காது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
Advertisements


