ஆந்திரத்தில் முதலீடு குறித்த ஸ்டாலின் பேச்சிற்கு எதிர்வினை ஆற்றிய நைனார்..!

தமிழகத்தில் 1720 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் ஹ்வாசங், அதை விட்டுவிட்டு ஆந்திரத்தில் முதலீடு செய்யவிருப்பதாக மாநில பாஜக தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வீண் பேச்சு பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய்ச் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என முதலமைச்சரின் செயல் இருப்பதாகவும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *