Italy: சிங்கம் ஒன்று புறப்பட்டதே… வைரலாகும் வீடியோ..!!

Advertisements

சிங்கம் ஒன்று புறப்பட்டதே… என் பேரு கிம்பா… இத்தாலிய வீதிகளில் ஹாயாக உலா வரும் சிங்கம்…  வைரலாகும் வீடியோ..!!

இத்தாலியில் சர்க்கஸில் இருந்து தப்பி வந்த சிங்கம் ஒன்று நகர வீதிகளில்  நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயம் பயம் கலந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  News.com.au என்ற ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 8 வயது  கிம்பா என்ற ஆண் சிங்கம் இத்தாலி நகர ரோனி ரோலர் சர்க்கஸில் இருந்து ரோம் நகரத்தில் நவம்பர் 11 -ஆம் தேதி மாலை தப்பித்து சென்றுள்ளது. ரோம் நகரத்தில் பெரியதாக கர்ஜித்தபடியே அங்கும் இங்கும் நடை போட்டு அனைவரையும் கதிகலங்க வைத்தது.

Advertisements

ரோம் நகர மேயருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வனத்துரையின் மூலம் சிங்கத்தை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *