
கோவை: கோவை, பொள்ளாச்சியில் இயங்கி வரும் நகை கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து கோவையில் உள்ள ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் முறைகேடு தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள் குழுவினர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் செயல்படும் தங்க நகை தொழில் நிறுவனங்களில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.
