Grandline Panchayat: ஊர்வலமாகச் சென்று பெண்கள் சிறப்பு வழிபாடு!

Advertisements

கிராண்ட்லையன் ஊராட்சியில் ஆங்கில புத்தாண்ட முன்னிட்டு  விளக்குப் பூஜை நடைபெற்றது.

பெண்கள் கலந்துகொண்டு விளக்கேந்தி ஊர்வலமாகக் கிராண்ட்லையன் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனைகள் செய்து  சுவாமி தரிசனம் செய்தனர்.

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் கிராண்ட்லையன் ஊராட்சியில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு புழல் ஒன்றிய வன்னியர் சங்கம் சார்பில் 15-ம் ஆண்டு விளக்குப் பூஜை புழல் ஒன்றிய வன்னியர் சங்க தலைவரும் பாமக ஒன்றிய செயலாளருமான. வழக்கறிஞர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வடகரை ஊராட்சி பஜனை கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரத்துடன் விஷேச பூஜைகள் செய்து  பின்னர் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேந்தி ஊர்வலமாகக் கிராண்ட்லையன் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனைகள் செய்து  சுவாமி தரிசனம் செய்தனர்.

இதணைத்தொடர்ந்து அம்மனுக்கு புத்தாண்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் வேலு, விஜயகுமார், அருணகிரி, ரகு  உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் கலந்துகொண்டனர்.முடிவில் வன்னியர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *