
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையை முன்னிட்டு ஒரே காரில் ஓ பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் டிடிவி தினகரனும் இணைந்து வந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே பசும்பொன் தேவர் கோவில் பூசாரியை ஸ்ரீதர் வாண்டார் கன்னத்தில் அறைந்த சம்பவமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவின் முதல் கட்டமாக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்றார்.
அங்குமுத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவியம் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்து முத்துராமலிங்க தேவர் குறித்து பேசினார். இந்த நிகழ்வின்போது பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையம் வந்தார் . அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . பின்னர் பசும்பொன் சென்று அன்புள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் செல்லூர் ராஜு டீ ஜெயக்குமார் விஜயபாஸ்கர் ஆர்பி உதயகுமார் ராஜேந்திர பாலாஜி உள்பட பலரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இது தவிர அதிமுக எம்எல்ஏக்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒரே காரில் பசும்பொன் வருவதாக தகவல் பரவியது. முன்னதாக ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் ஆகிய இருவரும் பயணித்து வந்த கார் மானாமதுரை அருகே நிறுத்தப்பட்டது அங்கு டிடிவி தினகரன் வந்து இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டது.
காரில் பயணித்தபடியே ஓ பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் அரசியல் நிலவரம் குறித்து பேசி வந்துள்ளனர். புதிய திட்டம் எதுவும் இருக்குமானால் டிடிவி தினகரனையும் சேர்த்துக் கொள்ள முடியும் . நான் சொன்னால் தினகரன் கேட்டுக் கொள்வார் என்கிற ரீதியில் ஓ பன்னீர்செல்வம் பேசி வந்திருக்கிறார். அப்பொழுது ஏன் நாம் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கக்கூடாது என்றும் அவர்கள் பேசியதாக தெரிகிறது.
டிடிவி தினகரன் வருகைக்காக ஓ பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் காத்திருந்த நிலையில் உடனடியாக இது பற்றிய தகவல் நிருபர்கள் அறிந்த நிலையில் பசும்பொன்னில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி இடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டைன் ஆகிய மூவரும் ஒரே காரில் பசும்பொன் வருகிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது இது ஒரு உயர்வான இடம் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் தேவர் பொதுவானவர் அவர் தேச பக்தி மிகுந்தவர், தேசியத்திற்காக பாடுபட்டவர் , அப்படி இருக்கும் ஒருவருக்கு அனைவரும் புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது என்றார். மேலும் கருத்து தெரிவிக்கும் பொழுது டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக வருகிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது .
வந்தால்தான் தெரியும் வந்தால் நான் பதில் சொல்கிறேன் என்று தெரிவித்தார். இதனிடையே இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அரசியலில் யாருடன் கூட்டணி சேர்வது? அரசியல் களத்தில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்தனர். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழி சசிகலாவும் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்.
இதனூடையே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி பிடித்தார். உடனடியாக அவரை கட்சி பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்குவதாக அறிவித்தார். கடந்த ஒரு மாத காலமாக அமைதியாக இருந்த செங்கோட்டை எனும் ஓபிஎஸ்சும் இன்று ஒன்றாக சந்தித்துள்ளனர் . ஒரே காரில் பேசியபடி வந்துள்ளனர்.
இதனால் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக புதிய அணியை உருவாக்குவதற்கான அச்சாரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது . இவர்கள் மூவரும் பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அலை இன்னும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பசுமம் பொன்னுக்கு வரும் மூவரும் ஒன்றாகச் செல்லும் பட்சத்தில் பின்னர் சசிகலாவையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது இதனால் இன்னும் சில நாட்களில் புதிய அரசியல் புயல் ஏற்படும் என தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி இதனை எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு புதிய அணி உருவானால் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே பசும்பொன்னில் மற்றொரு பரபரப்பு நிகழ்வு அரங்கேறியது மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தனது சகாக்களுடன் பசும்பொன் தேவருக்கு மரியாதை செலுத்த வந்திருந்தார். அப்பொழுது ஸ்ரீதர் வாண்டையாரை முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள பூசாரிகள் தடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது . இதனால் கோபம் அடைந்த ஸ்ரீதர் வாண்டையார் பூசாரியின் கன்னத்தில் அறைந்தார் . இதை தொடர்ந்து அங்கு கைகலப்பு ஏற்பட்டது.
ஸ்ரீதர் வாண்டையாருடன் வந்தவர்கள் பூசாரியை மேலும் தாக்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அமர்ந்து தருணா போராட்டத்தில் ஈடுபட்டார் . இதன் பிறகு காவலர்கள் வந்து அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பசும்பொன் வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டிடிவி தினகரன் பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர். அப்பொழுது டிடிவி தினகரன் கூறும் பொழுது மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மலர வேண்டும்.
என்பதுதான் எங்களது நோக்கம் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முகமாக இன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கிறோம் நிச்சயமாக திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் . சசிகலாவை பொருத்தவரையில் போக்குவரத்து நெரிசலால் அவர் வருவதற்கு காலதாமதம் ஆகிறது இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார் என்று தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் பொழுது அனைவருக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தான் லட்சியம் அது நிச்சயமாக நிறைவேறும் என்று தெரிவித்தார்.
இறுதியாக சசிகலாவும் பசும்பொன் வந்தார் அப்பொழுது செங்கோட்டையன் சசிகலா ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர் இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது இது மூன்று பேரும் சேர்ந்தது. ஏற்கனவே போடப்பட்ட திட்டமாகும் ஓ பன்னீர்செல்வம் திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார். இவர்களின் உள்ளடி வேலைகளால் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக வெற்றியை இழந்தது .
மேலும் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்குவதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை . தற்பொழுது அதிமுகவை பொருத்தவரையில் களைகள் பறிக்கப்பட்டு பயிர் செழிப்பாக வளர்ந்து வருகிறது. வருகிற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார். தவெகவுடன் கூட்டணி குறித்து பேசும்போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.
தமிழக வெற்றிக்கழகமும் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பத்திரிக்கையாளர்கள் எழுதும் செய்திக்கு நான் எதுவும் பொறுப்பு இல்லை என்கிறார்.

