Kerala : பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை..!

Advertisements

கேரளத்திலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக முதலமைச்சர் பினறாயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் அமைச்சர்களுடன் கேரள முதலமைச்சர் கலந்தாய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளத்தில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தம் செயல்படுத்தபடும் எனத் தெரிவித்தார்.

இதுவரை எந்தத் திட்டத்திலும் உதவித் தொகை கிடைக்கப்பெறாத 35 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஸ்ரீ சுரக்க்ஷா திட்டம் நவம்பர் 1 முதல் கேரளத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறினார்.

இதேபோல் முதியோர் உதவித்தொகை 1600 ரூபாயிலிருந்து 400 ரூபாய் உயர்த்தி 2000 ரூபாயாக வழங்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *