நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. மேலும் சுபமுகூர்த்த நாட்கள், தீபாவளி பண்டிகை வருவதால் தங்கம் விலை அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தங்கம் விலை 26-ந்தேதி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனையானது.   அதனை தொடர்ந்து 27-ந்தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும் விற்பனையானது.   28-ந்தேதி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,05,560-க்கு விற்பனையானது. இதனால் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 155 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும் சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனையாகிறது.  இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம் என்றே சொல்லலாம். கிறது.

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2.10 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *