இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதையை செலுத்தினார். மரியாதையை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முத்துராமலிங்க தேவரை புகழ்ந்து பேசினார்.
பின்னர், “சட்டமன்றத்தில் தனது குரல் ஒழிக்கப்படவேண்டும்” என்று பலர் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, “பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல நாங்கள் பைத்தியக்காரர்கள் இல்லையே” எனப் பதிலளித்தார். மேலும், கூட்டணிக்காக சமரசம் செய்யப் போவதில்லை என்றும், தவெகவா? நாதகவா? என்பது தேர்தலில் தெரிந்துவிடும் என்று கூறினார்.
திருச்சி கிழக்கில் எப்படி தனித்து நின்று போட்டியிட்டோமோ அதுபோலத்தான் இன்று தவெக-வா.. நாதக-வா?. அவர்கள் ஹீரோ கட்சி என்கிறார்கள் நங்கள் ஜீரோ கட்சி என்கிறோம். அண்ணனா.. தம்பியா? தெரிந்துவிடப்போகிறது” என்று அவர் பத்திரிகையார்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், “இடைத்தேர்தலின்போது முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியதைத்தான் நானும் கூறுகிறேன்” என்று சீமான் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும்பேசுபொருளாக மாறியுள்ளது.

