
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 1) சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 57200-க்கு விற்பனையாகிறது. ஆண்டின் முதல் நாளான இன்று விலை அதிகரித்து, ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று டிசம்பர் 31ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து, சவரன் ரூ 56,880-க்கு விற்பனையானது. முந்தைய நாளைவிடக் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7110-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ 2 குறைந்து கிராம் ரூ 98-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், புத்தாண்டின் முதல் நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், முதல் நாளிலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று குறைந்த அளவுக்கு இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலையானது ஒவ்வொரு வருடமும் வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கத்தின் சராசரி விலை 4,400 ரூபாயாக இருந்தது. கடந்த 24 வருடங்களில் ஒரு சவரனுக்கு 54,000 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை பெருமளவில் உயரும் என்பதால் தற்போதே தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய மக்கள் விரும்புகிறார்கள். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் சில வருடங்களில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் போட்டி போட்டுத் தங்கம் வாங்கி வருகிறார்கள்.
தங்கம் இந்தியாவைப் பொறுத்தவரை வெறும் முதலீட்டு வாய்ப்பு மட்டுமல்ல, செல்வச் செழிப்பின் அடையாளம். இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. எந்த நாடும் வைத்திருக்கும் தங்கத்தை விட இது மிக அதிகம். உலகின் தங்கத்தில் 11% இந்தியப் பெண்களிடம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


