GM of Indian Bank M. Karthikeyan: இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கு!

Advertisements

சென்னை தெற்கு மண்டலத்தில்  75 கோடியும், மதுரை மண்டலத்தில் 25 கோடியும் கடன் வழங்கி உள்ளதாகப் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

பேங்க் ஆப் இந்தியா மதுரை மண்டலம் சார்பாகப் பெண்கள் மேம்பாடு திட்டம்குறித்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப் பேப்பர் பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் இன்று  நடைபெற்றது. இதில் மதுரை மண்டல மேலாளர் உன்னி கிருஷ்ணன்  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பேங்க் ஆஃப் இந்தியா  செயல் இயக்குநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் குழுவினருக்கு ஐந்து கோடிக்கணக்கான காசோலை மற்றும் மகளிர் கடன் உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேங்க் ஆஃப் இந்தியா செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில்:பேங்க் ஆப் இந்தியா 118 வருடமாகத் தேசிய அளவில் 5132 கிளைகளைக் கொண்டுள்ளது 2023 – 2024 முதல்  காலாண்டில் 1551 கோடி லாபம் பெற்றுள்ளோம் இரண்டாம் காலாண்டில் 1498 கோடி நிகர லாபம் பெற்றுள்ளோம்.

இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கை நோக்கி நம் சென்று கொண்டுள்ளோம். அதற்காக 70 மேற்பட்ட திட்டங்களை வைத்துள்ளோம். பேங்க் ஆப் இந்தியா தனது ஐடி துறைக்கு 25 கோடி செலவு செய்துள்ளது தற்பொழுது பேங்க் ஆப் இந்தியா புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் 12 கோடிக்கு மேல் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கு செய்ய வேண்டும் இதன் மூலம் பண பரிவர்த்தனை முதலீடு போன்றவை சுலபமாகச் செய்யலாம்

தற்பொழுது சென்னை தெற்கு மண்டலத்தில்  75 கோடியும் மதுரை மண்டலத்தில் 25 கோடியும் கடன் வழங்கி உள்ளோம் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *