
குற்றாலத்தில் குளுகுளு சீசன்! குற்றாலத்திற்க்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
இன்று முதல் பள்ளிகளுக்குக் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் இருந்தே அருவிகளில் குடும்பத்துடன் வந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இன்று முதல் பள்ளிகளுக்குக் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் இருந்தே அருவிகளில் குடும்பத்துடன் வந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், காயல்பட்டினத்திலும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. எட்டயபுரத்தில் 1.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

