Girl bathing Filmed Threatened Raped College Student: சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!

Advertisements

சாத்தூர் அருகே சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், பருப்பு கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேது (19). இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி ஓட்டல் மேனேஜ்மென்ட் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவரது உறவினர் வீடு வெம்பக்கோட்டை அருகே கிராமத்தில் உள்ளது.

கடந்த 4 மாதத்திற்கு முன் சேது கிராமத்திற்கு சென்றபோது, உறவினர் வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுமி குளிப்பதை, சேது மறைந்திருந்து செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

பின்னர் அதை சிறுமியிடம் காண்பித்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அடிக்கடி உறவினர் வீட்டுக்கு சென்று, சிறுமியை மிரட்டி பலாதாரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சேது மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *